கிரிக்கெட்

ரிக்கல்டன் அபார சதம்: மும்பை அணி 243 ரன்கள் குவிப்பு

மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான் கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட் டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் மும்பை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ரிக்கல்டன் , வில் ஜாக்ஸ் இருவரும் சிறப்பாக விளையாடினர். ஜாக்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். மறுபுறம் ரிக்கல்டன் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டார். ஐதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்த அவர் சதமடித்து அசத்தினார். ரிக்கல்டன் 55 பந்துகளில் 121 ரன்கள் எடுத்தார்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது.

SCROLL FOR NEXT