கிரிக்கெட்

ரிக்கெல்டன், முல்டர் சதம்: சரிவில் இருந்து மீண்டது தென் ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே தென்ஆப்பிரிக்கா 329 ரன்களும், ஆஸ்திரேலியா 429 ரன்களும் எடுத்தன. பின்னர் 100 ரன் பின்தங்கிய நிலையில் தனது 2-வது இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 3-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது.

ரிக்கெல்டன், முல்டர்

மேத்யூ பிரீட்ஸ்கே (19 ரன்). ரையான் ரிக்கெல்டன் (8 ரன்) களத்தில் இருந்தனர். 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பிரீட்ஸ்கே 43 ரன்னில் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு ரிக்கெல்டனும், வியான் முல்டரும் இணைந்து அணியை சிக்கலில் இருந்து மீட்டதுடன் வலுவான ஸ்கோரை நோக்கி பயணிக்க வைத்த னர். ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் 8 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை அவ்வளவு எளிதில் பிரிக்க முடியவில்லை. தனது 3-வது சதத்தை அடித்த ரிக்கெல்டன் 101 ரன்களில் (219 பந்து, 12 பவுண்டரி) ரன்-அவுட் ஆனார். 4-வது சதத்தை எட்டிய முல்டர் 115 ரன்களில் (221 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.

தென்ஆப்பிரிக்க அணி

தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சிஸ் 134.4 ஓவர்களில் 387 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 288 ரன்களை வெற்றி இலக்காக தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்து இருக்கிறது. கடைசி நாளான இன்று ஆஸ்திரேலியா இலக்கை துரத்திப்பிடிக்குமா அல்லது தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடங்கிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. கேப்டவுன் மைதானத்தில் 250 ரன்னுக்கு மேலான இலக்கு இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே வெற்றிகரமாக 'சேசிங்' செய்யப்பட்டிருப்பது நினைவு கூரத்தக்கது.

SCROLL FOR NEXT