கிரிக்கெட்

சமாஜ்வாதி எம்.பி.யை மணக்கும் ரிங்கு சிங்; பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்.

டெல்லி,

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் தனது காதலியான சமாஜ்வாதி எம்.பி. பிரியா சர்ஜோஜை திருமணம் செய்ய உள்ளார்.

ரிங்கு சிங் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் இந்திய அணிக்காக 2 ஒருநாள், 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார்.

இதனிடையே, 29 வயதான ரிங்கு சிங்கும் சமாஜ்வாதி கட்சி எம்.பியான பிரியா சரோஜும் காதலித்து வந்தனர். இவருக்கும் இடையே கடந்த ஜுன் 8ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும், ரிங்கு சிங் - பிரியா சரோஜ் திருமணம் அடுத்த மாதம் 4ம் தேதி உத்தரபிரதேசத்தின் லக்னோவில் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

இந்நிலையில், ரிங்கு சிங் - பிரியா சரோஜ் ஜோடி இன்று பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, தங்கள் திருமண விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு இருவரும் அழைப்பு விடுத்தனர்.

இது தொடர்பாக ரிங்கு சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பிரதமர் மோடியை எனது குடும்பத்துடன் சந்தித்து எனது திருமண நிகழ்ச்சிக்கு வந்து ஆசி வழங்குமாறு அழைப்பு விடுத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இது எங்களுக்கு மிகவும் சிறப்புவாய்ந்த தருமணாகும்’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT