கிரிக்கெட்

ரிஷப் பண்ட் கேப்டன்சி: லக்னோ அணி உரிமையாளர் வெளியிட்ட பதிவு

இந்த சீசன் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், என சஞ்சீவ் கோயங்கா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கேப்டன்சி தொடர்பாக அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்த சீசனின் தொடக்கத்தில், ரிஷப் பண்ட் கேப்டன்சி குறித்த யூகங்களைப் படித்து புன்னகைத்தேன். அவருடைய குணத்தையும் அர்ப்பணிப்பையும் அறிந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் ஒன்றாகப் போதுமான நேரத்தைச் செலவிட்டிருக்கிறோம். இந்த சீசன் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள், கேப்டன். என தெரிவித்துள்ளார்.