ஒருநாள் தொடர் முடிந்ததும், இந்தியா-நியூசிலாந்து இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடக்கிறது. முத லாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் உடல் தகுதியை எட்டினால், நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான ஆதிகாரபூர்வமற்ற டெஸ்டில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் விலா பகுதியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக மீளாததால் அதில் ஆடவில்லை. இந்த நிலையில் அவருக்கு பெங்களூ ருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பயிற்சி மையத்தில் உடல் தகுதி சோதனை நேற்று நடந்தது. இன்று மேலும் ஒரு சுற்று உடல் தகுதி தேர்வுக்கான பயிற்சி நடக்கிறது. உடல் தகுதி சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்ததும் ரிஷப் பண்ட் நாளை நியூசிலாந்துக்கு புறப்பட்டு செல்வார் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.