கொழும்பு,
இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட்டை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் 89 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 63 ரன்கள் எடுத்தார். இப்போட்டியில் அடித்த 2 சிக்ஸ்ர்கள் மூலம் டெஸ்டில் அவர் அடித்த சிக்ஸ்ர்களின் எண்ணிக்கை 102-ஆக உயர்ந்தது.
இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட்டை (100 சிக்ஸர்கள்) பின்னுக்குத் தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
1. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 138 சிக்ஸர்கள்
2. பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து) - 107 சிக்ஸர்கள்
3. ரிஷப் பண்ட் (இந்தியா) - 102 சிக்ஸர்கள்
4. ஆடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா) - 100 சிக்ஸர்கள்
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 503 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் எடுத்துள்ளது.
லஹிரு உதாரா 1 ரன்னிலும், பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கமில் மிஷாரா 5 ரன்களுடன் களத்தில் உள்ளார். 3-வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.