தோஹா,
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை 2026 ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் ஏ அணியும் இலங்கை ஏ அணியும் இன்று மோதுகின்றன. தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தத் தொடரில் இரு அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தின. தொடர்ந்து அரையிறுதிப் போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
முதல் அரையிறுதியில் இலங்கை ஏ அணி, இந்தியா ஏ அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணி, வங்காளதேச ஏ அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதுவரை இந்தத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி மூன்று முறையும், இலங்கை ஏ அணி இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதனால், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்பில் இலங்கை ஏ அணியும், நடப்பு சாம்பியன் என்ற பெருமையைத் தக்கவைக்கும் நோக்கில் பாகிஸ்தான் ஏ அணியும் களமிறங்குகின்றன.