கிரிக்கெட்

2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி ? கேப்டன் கில் பதில்

விராட் கோலி, ரோகித் சர்மா மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள்

புதுடெல்லி,

2027-ல் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இந்த உலககோப்பை தொடரில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு இந்திய அணியில் இடம் கிடைக்குமா? என்ற கேள்விகள் எல்லாம் எழுந்து வருகிறது. இதற்கு காரணம் விராட் கோலிக்கு 37 வயதாகிறது. ரோகித் சர்மாவுக்கு 39 வயதாகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி தொடர்பாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது,

அவர்கள் (விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா) மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார்கள். ரோகித் சர்மா கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் மூன்று சதங்களை அடித்துள்ளார் என்று நினைக்கிறேன். அவரும் விராட் கோலியும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

உண்மையைச் சொல்லப்போனால், பரிசோதனை முயற்சிகளில் ஈடுபடுவதற்கு அதிக நேரம் இல்லை என்றே நான் கருதுகிறேன். அடுத்த தொடரிலிருந்தே அனைத்து வீரர்களும் விளையாடும் நிலைமையில் இருப்பார்கள் என்று நம்புகிறேன். உலகக் கோப்பையில் நாம் எந்தக் கூட்டணி அல்லது வீரர்களுடன் விளையாட விரும்புகிறோமோ, அதையே இப்போதிருந்தே பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT