கிரிக்கெட்

ரோகித் சர்மா புதிய சாதனை

அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, 2026 காலண்டர் ஆண்டில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் (ODI) அதிக கேட்ச் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

ரோகித் சர்மா

நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 13-ம் தேதி மவுண்ட் மாங்கனுயில் நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில், அக்சர் படேல் வீசிய பந்தில் பின் ஆலனை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் மூலம் 2026-ம் ஆண்டில் தனது 12-வது கேட்சைப் பதிவு செய்தார்.

இதற்கு முன்பு 2018-ம் ஆண்டில் 11 கேட்சுகள் பிடித்ததே ரோகித் சர்மாவின் ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்ச கேட்ச் சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை அவரே முறியடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டிகளில் அவரது ஒட்டுமொத்த கேட்ச் எண்ணிக்கை 112-ஆக உயர்ந்துள்ளது.

அவருக்கு அடுத்தபடியாக கே.எல். ராகுல் 11 கேட்சுகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நமன் தீர் ஆகியோர் தலா 6 கேட்சுகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். விராட் கோலி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தலா 5 கேட்சுகளைப் பிடித்துள்ளனர்.

SCROLL FOR NEXT