கிரிக்கெட்

“தூக்கம் வராது... பசி எடுக்கும்” - டெஸ்ட் போட்டி பதற்றம் குறித்து ரோகித் சர்மா ஓபன் டாக்

ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளின்போது தனக்கு ஏற்படும் பதற்றம் குறித்து மனம் திறந்து பேசினார்.

மும்பை,

டெஸ்ட் கிரிக்கெட்தான் தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வடிவம் என்றும், அதே நேரத்தில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது அதிக பதற்றத்தை உணர்வதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

தூக்கம் வராது

ஒரு நிகழ்ச்சியில் பேசிய ரோகித் சர்மா, டெஸ்ட் போட்டிகளின்போது தனக்கு ஏற்படும் பதற்றம் குறித்து மனம் திறந்து பேசினார்.

அப்போது அவர், “டெஸ்ட் கிரிக்கெட்தான் எனக்கு மிகவும் பிடித்த வடிவம். இருப்பினும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போதெல்லாம் மிகவும் பதற்றமாக உணர்வேன். அந்தப் பதற்றம் காரணமாக இரவில் தூக்கம் வராது. நள்ளிரவில் பசி எடுக்கும்போது, என் அம்மா செய்து கொடுத்த நேந்திரம்பழ சிப்ஸ்களை சாப்பிடுவேன்” என்று தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டி

ரோகித் சர்மா 2013 முதல் 2024-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இதில் அவர் 12 சதங்கள், 18 அரைசதங்கள் உள்பட மொத்தம் 4,301 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 212 ரன்கள் ஆகும்.

ஒருநாள் தொடர்

இம்மாதம் தொடங்கும் வெஸ்ய்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டு ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா விளையாட உள்ளார்.

இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி செப்டம்பர் 27-ந்தேதியும், 2-வது போட்டி 30-ந்தேதி கவுகாத்தியிலும், 3-வது போட்டி அக்டோபர் 3-ந்தேதி நியூ சண்டிகரிலும் நடைபெறுகிறது. அனைத்து போட்டிகளும் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகின்றன.

SCROLL FOR NEXT