அகமதாபாத்,
19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இந்நிலையில், 2026ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான இறுதிப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சாய் சுதர்ஷன், கேப்டன் சுப்மன் கில் களமிறங்கினர்.
8 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கில் அவுட் ஆனார். சாய் சுதர்ஷன் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய நிஷாந்த் சிந்து 20 ரன்களிலும், ஜோஸ் பட்லர் 19 ரன்களிலும், அர்ஷத் கான் 15 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த ராகுல் திவாடியா 7 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் வந்த ஜேசன் ஹோடருடன் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹோல்டர் 7 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வந்த ரஷித் கானும் 7 ரன்னில் அவுட் ஆனார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாஷிங்டன் சுந்தர் 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு தரப்பில் அந்த அணியின் ரஷிக் சமால் தர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், ஜேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், குர்னால் பாண்டியா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கி விளையாட உள்ளது.