கிரிக்கெட்

ஐபிஎல்: பெங்களூரு - லக்னோ இன்று மோதல்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு,

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோத உள்ளன.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.

ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.