image courtesy: IPL twitter via ANI 
கிரிக்கெட்

ஹெட்மயர் தாயகம் திரும்பினார் - ராஜஸ்தான் அணிக்கு பின்னடைவு..!

மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேன் 25 வயதான ஹெட்மயர், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும்.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.