சென்னை,
கடந்த 2013 ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில், சென்னை அணி வீரர் மகேந்திர சிங் தோனிக்கும் தொடர்பு இருப்பதாக, ஓய்வுப் பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார், தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி, ரூ.100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி சம்பத்குமாருக்கு எதிராக தோனி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமார் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தோனி பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தாக்கல் செய்த மனு தொடர்பாக தோனி பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தோனியின் வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்ய கோரிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வீடியோ பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தை எடிட் செய்யாமல் தனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.