கிரிக்கெட்

ருதுராஜ் கெய்க்வாட் விரைவில் ரன்களை குவிப்பார்: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை

எம். எஸ் தோனி நல்ல முறையில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருகிறார் என்று ஸ்டீபன் பிளமிங் கூறினார்.

19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 வெற்றி, 4 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5- வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8- வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்சை நாளை ( ஞாயிற்றுக்கிழமை) எதிர் கொள்கிறது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி குஜராத்தை வீழ்த்தி 4- வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சேப்பாக்கத்தில் நடை பெறும் 4-வது போட்டியாகும். சென்னை அணி சொந்த மண்ணில் முதல் ஆட்டத்தில் தோற்றது.

அடுத்த 2 போட்டியில் வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிராக சி.எஸ்.கே. மிகவும் சிறப் பான ஆட்டத்தை வெளிப்ப டுத்தியது. இதனால் இதே அதிரடி சேப்பாக்கத்திலும் தொடருமா? என்று ரசி கர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். சேப்பாக்கத்தில் ஹாட்ரிக் வெற்றி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனிடையே இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியதாவது

எம். எஸ் தோனி நல்ல முறையில் காயத்தில் இருந்து மீண்டு பயிற்சி எடுத்து வருகிறார்.விரைவில் களத்திற்கு திரும்புவார் என்று நம்பிக்கை உள்ளது ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரரை பார்த்து வருகிறோம்; ஊர்வில் பட்டேல் ஏற்கனவே அணியில் உள்ளதால் மாற்று வீரர்களை வாங்குவதில் எந்த ஒரு அவசரமும் இல்லை

ருத்ராஜ் கெய்க்வாட் திறமை குறித்து எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. வெளியே அவர் மீது விமர்சனங்கள் இருக்கிறது என எங்களுக்கு தெரியும். இருந்தாலும் அணிக்குள் அவருக்கு நல்ல ஆதரவு உள்ளது; விரைவில் அவர் ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.