மும்பை,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் இ-சிகரெட் பயன்படுத்திய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அவுட்டாகி வெளியேறிய போது, டிரஸ்சிங் ரூமில் இதைச் செய்துள்ளார். ரியான் பராக்கின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இவ்விவகாரம் தொடர்பாக பிசிசிஐ விசாரணையை தொடங்கியது.
இந்தியாவில் இ-சிகரெட் பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். கடும் அபராதம் அல்லது சிறை தண்டனை கூட விதிக்க சட்டத்தில் இடமுள்ளது.
இந்த நிலையில் ரியான் பராக்கிற்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த அணியின் மேலாளர் விதிகளை மீறி டக் அவுட்டில் இருந்தபடி செல்போன் பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. நேரலையில் இந்த காட்சிகள் வெளியான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேலாளர் ரூமி பிந்தருக்கு அபராதம் விதித்த பிசிசிஐ கடும் எச்சரிக்கையையும் விடுத்து இருந்தது.