சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பையில் விளையாடிய வீரர்கள், ஐ.பி.எல். அணிகளுக்கு திரும்பி வருகின்றனர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நீண்ட காலம் விளையாடிய சஞ்சு சாம்சன் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றுள்ளார். சஞ்சு சாம்சனை கொடுத்து ஜடேஜா , சாம் கரனை ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது.
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் தொடர்பாக பேசிய ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் கூறியதாவது,
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டனாக ரியான் பராக் உள்ளது. இவர் சஞ்சு சாம்சன் பற்றி கூறுகையில் "யாரையும் சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ரோகித் சர்மா அல்லது விராட் கோலிக்கு நீங்கள் மாற்று என யாரையாவது நினைக்க முடியுமா?. அதே அடிப்படையில்தான் சஞ்சு சாம்சனுக்கு மாற்று என்பது இல்லை.என தெரிவித்தார்.