கிரிக்கெட்

சச்சின் டெண்டுல்கருக்கு ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026’ விருது வழங்கி கவுரவிப்பு

இவ்விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம்

மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற விழாவில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ‘குளோபல் பீஸ் ஹானர்ஸ் 2026’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை மூலம் பழங்குடியின மற்றும் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு விளையாட்டு துறையில் வாய்ப்புகளை உருவாக்கி வருவதற்காக அவருக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சிக்கு முக்கியத்துவம்

சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளை சார்பில் கால்பந்து, கூடைப்பந்து, மல்யுத்தம், குத்துச்சண்டை மற்றும் தடகளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகளின் திறமைகளை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கும் விளையாட்டுத் துறையில் சம வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

சச்சின் அஞ்சலி

இவ்விழாவில் பேசிய சச்சின் டெண்டுல்கர், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தங்களது உயிரை தியாகம் செய்தவர்களையும், தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து இன்றளவும் அந்த துயரத்தை சுமந்து வாழும் குடும்பத்தினரையும் நினைவுகூர்ந்தார்.

உயிரிழந்தவர்களின் தியாகத்தையும் அவர்களது குடும்பத்தினரின் இழப்பையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும் சச்சின் வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT