கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமனம்

பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக பர்ஹான் பொறுப்பேற்றுள்ளார்.

லாகூர்,

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சாஹிப்சாதா பர்ஹான் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் சல்மான் அலி ஆகாவுக்குப் பதிலாக பாகிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக பர்ஹான் பொறுப்பேற்றுள்ளார்.

சமீபத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வழிநடத்திய ஃபர்ஹான், அணியை வெள்ளிப் பதக்கம் வெல்லச் செய்தார். இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

பாகிஸ்தான்–இலங்கை இடையிலான 3 டி20 போட்டிகளும் ராவல்பிண்டியில் நடைபெறுகின்றன.அதன்பின்னர் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் ஒருநாள் முத்தரப்பு தொடர் நடைபெறுகிறது. இலங்கை தொடருக்கான டி20 அணியில் பாபர் அசாம் மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி இடம்பெறவில்லை.

பாகிஸ்தான் டி20 அணி:

சாஹிப்சாதா பர்ஹான் (கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, அரபத் மின்ஹாஸ், பகர் ஜமான், ஹசன் நவாஸ், முகமது இம்ரான் ரந்தாவா, கவாஜா நபே , மாஸ் சாதகத், நசீம் ஷா, ரசாவுல்லா, சைம் அயூப், முகமது சல்மான் மிர்சா, ஷதாப் கான், சுபியான் மொகீம்.

SCROLL FOR NEXT