கிரிக்கெட்

அபிஷேக் சர்மாவின் உலக சாதனையை தகர்த்த பாகிஸ்தான் கேப்டன்

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

ராவல்பிண்டி,

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் கேப்டன் சாஹிப்சாதா பர்ஹான் 238 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

அபிஷேக் சர்மா

இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் கேப்டன் சாஹிப்சாதா பர்ஹான் 47 பந்துகளில் 76 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் அடங்கும். இந்த தொடரில் தொடர்ந்து 3-வது அரைசதத்தைப் பதிவு செய்த அவர், மொத்தம் 238 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் இரு முழு உறுப்பு நாடுகளுக்கு (Full Members) இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேசத் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் சாஹிப்சாதா பர்ஹான் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதற்கு முன்பு இந்திய வீரர் அபிஷேக் சர்மா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 229 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. தற்போது பர்ஹான் 238 ரன்கள் குவித்து அந்த சாதனையை தகர்த்துள்ளார்.

அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்

1. சாஹிப்சாதா பர்ஹான் (பாகிஸ்தான்) – 238 ரன்கள்

2. அபிஷேக் சர்மா (இந்தியா) – 229 ரன்கள்

3. முன்ரோ (நியூசிலாந்து) – 223 ரன்கள்

4. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) – 217 ரன்கள்

5. ஹஸ்ரத்துல்லா சசாய் (ஆப்கானிஸ்தான்) – 204 ரன்கள்

இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!

இந்த போட்டியில் 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் 17 பந்துகள் மீதமிருந்த நிலையில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இருப்பினும், முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்த பாகிஸ்தான் அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய பர்ஹான் தொடர் நாயகன் விருதையும் வென்றார்.

SCROLL FOR NEXT