கொழும்பு,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சாய் சுதர்சன் இடம்பெற்றிருந்தார்.
இந்நிலையில், காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்சன் விலகியுள்ளார். கடந்த மாதம் இலங்கை ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்று வரும் சாய் சுதர்சன் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.