Image Courtesy: X(Twitter) / File Image  
கிரிக்கெட்

சைம் அயூப் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்-க்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினார்.

புளோரிடா,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக பர்ஹான் மற்றும் சைம் அயூப் அகியோர் களம் புகுந்தனர். இதில் பர்ஹான் 14 ரன்னிலும், அடுத்து வந்த பகார் ஜமான் 28 ரன்னிலும்,ஹசன் நவாஸ் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சைம் அயூப் அரைசதம் அடித்த நிலையில் 57 ரன்னில் அவுட் ஆனார்.

தொடர்ந்து முகமது நவாஸ் மற்றும் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதில் நவாஸ் 9 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து பஹீர் அஷ்ரப் களம் இறங்கினார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 178 ரன் எடுத்தது.

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சைம் அயூப் 57 ரன் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 179 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட உள்ளது.

SCROLL FOR NEXT