கிரிக்கெட்

சாம் கர்ரன் அரைசதம் - ஆஸ்திரேலியாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.

சிட்னி,

4-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து.

தடுமாற்றம்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 4-வது ஆட்டம் இன்று சிட்னியில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான பிலிப் சால்ட், அனுரின் டொனால்ட் ஆகியோர் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹாரி புரூக் 9 ரன்களிலும், டாம் பான்டன் 3 ரன்களிலும் வெளியேறினர்.

தொடர்ந்து ஜேம்ஸ் கோல்ஸ் 33 ரன்களும், ஜோர்டன் காக்ஸ் 23 ரன்களும் சேர்த்தனர்.

அதிரடியாக அரைசதம் அடித்த சாம் கர்ரன்

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபுறம் அதிரடியாக விளையாடிய சாம் கர்ரன் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆதரவாக லியாம் டாசன் 23 ரன்களும், ஜேமி ஓவர்டன் 9 பந்துகளில் 20 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய உள்ளது.

SCROLL FOR NEXT