இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.
இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.
போட்டி நடக்கும் ஆக்லாந்து ஈடன்பார்க் மைதானம் மற்ற கிரிக்கெட் மைதானங்கள் போல் அல்லாமல் செவ்வக வடிவிலானது. இது கிரிக்கெட் மட்டுமின்றி குளிர்காலத்தில ரக்பி விளையாட்டுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான் இந்த வித்தியாசமான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த மைதானத்தின் பரிமாணங்கள் பீல்டிங் வியூகத்துக்கு பெரும் சவாலாக இருக்கக்கூடிய ஒரு அம்சமாகும்.
மேலும் பிட்ச்சின் மையப்பகுதியில் இருந்து நேர் பவுண்டரி தூரம் (52 முதல் 55 மீட்டர்) குறைவாக இருக்கிறது. அதே சமயம் பக்கவாட்டு பவுண்டரி தூரம் (64 முதல் 68 மீட்டர்) நீளமானது. அதனால் பேட்ஸ்மேன்கள் நேர்பகுதியில் சிக்சர் கள் அடிப்பது எளிது.
இன்றைய போட்டிக்கான ஆடுகளம், 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் போன்று இருக்காது. பந்து வீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சரிசம வாய்ப்பு வழங்கும் வகையில் இருக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் கணிச மாக பவுன்சும் இருக்கும். இந்த மைதானத்தில் இதுவரை 80 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இதில் 9 முறை 300 ரன்களுக்கு மேல் எடுக்கப்பட்டுள்ளன. 2007-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நியூசிலாந்து 340 ரன்கள் குவித் தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். இதே ஆண்டில் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 73 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும். இந்திய அணி இங்கு 11 ஆட்டங்களில் ஆடி 4-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும் கண்டுள்ளது. மற் றொரு ஆட்டம் சமனில் முடிந்தது.