வாஷிங்டன்,
4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 26வது லீக் ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மோத உள்ளன.
இந்திய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது. டெல்லஸ் நகரில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் மேத்திவ் ஷாட் தலைமையிலான சான் பிரான்சிஸ்கோ அணியும், ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.