கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார்? சான் பிரான்சிஸ்கோ - லாஸ் ஏஞ்சல்ஸ் நாளை மோதல்

மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ள சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், வாஷிங்டன் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

சான் பிரான்சிஸ்கோ - லாஸ் ஏஞ்சல்ஸ் மோதல்

இந்நிலையில், மேஜர் லீக் கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் குவாலிபையர் 1 சுற்று ஆட்டத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களில் உள்ள அணிகள் மோதும் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். இப்போட்டியில் தோல்வியடையும் அணி குவாலிபையர் 2 சுற்றுக்கு செல்லும்.

இதனால், நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற்றும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.