கிரிக்கெட்

காயம் காரணமாக டெஸ்ட் போட்டிகளில் இருந்து சாண்ட்னர் விலகல்

காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சாண்ட்னர் விலகியுள்ளார்.

வெலிங்டன்,

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிட்சேல் சாண்ட்னர் விளையாடி வந்தார். கடத 23-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது இடது தோள்பட்டையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சாண்ட்னர் ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடருக்கு இன்னர் நியூசிலாந்து அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக அடுத்த ஒரு மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிட்செல் சான்ட்னர் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு. அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சான்ட்னர் விளையாட மாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.