கிரிக்கெட்

உள்நாட்டில் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியம் 2026-27-ம் ஆண்டில் உள்நாட்டில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை நேற்று வெளியிட்டது. அடுத்த சீசனில் இந்திய அணி மொத்தம் 22 சர்வதேச போட்டிகளில் 17 நகரங்களில் விளையாடுகிறது.

செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் வெஸ்ட் இண்டீஸ் அணி செப்.27-ந்தேதி முதல் அக்டோபர் 17-ந்தேதி வரை 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஆடுகிறது. ஒரு நாள் ஆட்டங்கள் திருவனந் தபுரம், கவுகாத்தி, நியூ சண்டிகார், 20 ஓவர் ஆட்டங்கள் லக்னோ, ராஞ்சி, இந்தூர், ஐதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெறு கிறது.

இலங்கை அணி டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் மூன்று டி20 போட்டி களில் மோதுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை இடையிலான முதலா வது ஒரு நாள் போட்டி டிச.13-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. எஞ்சிய ஆட்டங்கள் பெங்களூரு, ஆமதாபாத், ராஜ்கோட், கட்டாக், புனே ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் இந்தியாவுக்கு வரும் ஜிம்பாப்வே அணி ஜன.3 (கொல்கத்தா), ஜன.6 (ஐதராபாத்), ஜன.9 (மும்பை) ஆகிய நாட்களில் மூன்று ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஜிம்பாப்வே அணி 2002-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்திய மண்ணில் இரு நாட்டு தொடரில் விளையாட உள்ளது.

ஜிம்பாப்வே போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வரு கிறது. இங்கு 'பார்டர்- கவாஸ்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.