கிரிக்கெட்

பள்ளி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் செயின்ட் பீட்ஸ் அணி

பள்ளி கிரிக்கெட்டின் இறுதிப்போட்டிக்கு செயின்ட் பீட்ஸ் அணி தகுதிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பள்ளி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் செயின்ட் பீட்ஸ்-நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த செயின்ட் பீட்ஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் அணி 39 ஓவர்களில் 99 ரன்னில் சுருண்டது. இதனால் செயின்ட் பீட்ஸ் அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் செயின்ட் பேட்ரிக்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் செட்டிநாடு வித்யாஷ்ரம் அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து