கிரிக்கெட்

பள்ளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கிரிக்கெட் பார்க்க வந்த மாணவர்கள்... கேமராவை பார்த்ததும் செய்த செயல் - வைரல்

அவர்களின் ஆர்வத்தைப் பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

வெலிங்டன் ,

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியைப் பார்ப்பதற்காக பள்ளிக்கு செல்லாமல் மைதானத்திற்கு வந்த மாணவர்கள், திடீரென கேமராவில் சிக்கிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சம்பவம்

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இப்போட்டி டிராவில் முடிந்தாலும், பார்வையாளர் அரங்கில் நடந்த சம்பவம் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இலவச அனுமதி

போட்டியின் கடைசி நாளில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனால், பலர் போட்டியை காண வந்திருந்தநிலையில், சில மாணவர்களும் பள்ளி வகுப்புகளை தவிர்த்துவிட்டு கிரிக்கெட் போட்டியை ரசிக்க வந்ததாக தெரிகிறது.

அவர்கள் பள்ளிச் சீருடையில் பார்வையாளர் அரங்கில் அமர்ந்து கிரிக்கெட் போட்டியை ரசித்துக்கொண்டிருந்தபோது, மைதான கேமரா அவர்களை நோக்கி திரும்பியது. இதனால், தங்களது முகங்கள் மைதானத்தின் பெரிய திரையில் ஒளிபரப்பப்படுவதை உணர்ந்த அவர்கள், கேமராவிலிருந்து தப்பிக்க முகத்தை மறைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பள்ளியைத் தவிர்த்துவிட்டு கிரிக்கெட் பார்க்க வந்த மாணவர்களின் செயலை சிலர் விமர்சித்தாலும், சிலர் கிரிக்கெட் போட்டியை ரசிக்க வந்த அவர்களின் ஆர்வத்தைப் பாராட்டியும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT