கிரிக்கெட்

மேஜர் லீக் கிரிக்கெட்: சூப்பர் கிங்சுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சியாட்டில்

மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது

வாஷிங்டன்,

4வது மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் கடந்த மாதம் 18 தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஓர்காஸ்

இந்நிலையில், இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 21வது லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஓர்காஸ் அணிகள் மோதி வருகின்றன.

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சியாட்டில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கமரூன் கென்னான் 20 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய சூப்பர் கிங்ஸ் அணியின் அம்ஷி டி சில்வா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர் கிங்ஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.