கிரிக்கெட்

2வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு

முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

கேப் டவுன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.

2வது ஒருநாள் போட்டி

இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஜோகனர்ஸ்பெர்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்து வரும் தென் ஆப்பிரிக்கா 7 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT