கேப் டவுன்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 365 ரன்கள் குவித்துள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
ஜோகனர்ஸ்பெர்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 365 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் டேவிட் மில்லர் 142 ரன்களும், கேப்டன் டிம்பா பவுமா 103 ரன்களும் குவித்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜாக் எட்வர்ட்ஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 366 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி விளையாட உள்ளது.