தர்மசாலா,
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக் கெட் தொடரில் முதலாவது ஆட்டம் தர்மசாலா வில் வருகிற 13-ந் தேதி நடக்கிறது. இந்த போட்டி தொடருக்கான சுப்மன் கில் தலைமையி லான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இதில் இடம் பிடித்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி ஐ.பி.எல். போட்டியின் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா, ஆல்-ரவுண்டர் ஹர் திக் பாண்ட்யா ஆகியோர் ஐ.பி.எல். தொடரின் போது காயத்தில் சிக்கினாலும் அணியில் அங்கம் வகிக்கின்றனர். அவர்கள் உடல் தகுதியை நிரூபிப்பதை பொறுத்து அணியில் நீடிப்பது இறுதி செய்யப்படும் என்று தெரிவிக் கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, கர்நாடகாவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு பயிற்சி மையத்துக்கு சென்று பயிற்சியாளர்கள் மேற்பார்வையாளர்கள் பயிற்சியில் ஈடுபட்டதுடன்,எந்த அசவுகரியமும் இன்றி 10 ஓவர்கள் முழுமையாக வீசி தனது உடல் தகுதியை நிரூபித்தார்.இருப்பினும் ஓய்வு எடுக்க ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ மருதுவக்குழு அறிவுறுத்தினர்.
இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்து ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.