கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக வில் யங் சேர்ப்பு

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அதிர்ச்சி முடிவை வெளியிட்டார்.

லண்டன்,

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இதற்கான நியூசிலாந்த அணியில் கேன் வில்லியம்சன் இடம் பிடித்திருந்தார். இந்த போட்டியில் கேன் வில்லியம்சன் முதல் இன்னிங்சில் டக்அவுட் ஆனார். 2-வது இன்னிங்சில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேன் வில்லியம்சன் அதிர்ச்சி முடிவை வெளியிட்டார்.

இந்த நிலையில், கேன் வில்லியம்சன் விலகியதால், இங்கிலாந்து தொடருக்கான மற்ற இரண்டு போட்டிகளுக்கான நியூசிலாந்து அணியில் வில் யங் சேர்க்கப்பட்டுள்ளார்.