வெல்லிங்டன்,
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி, இந்தியாவுக்கு எதிரான மீதமுள்ள டி20 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையைக் குறைத்து, காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் நியூசிலாந்து அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இரண்டாவது டி20 போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக ஹென்றிக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக பிளேர் டிக்னர் அணியில் சேர்க்கப்படுகிறார்.
மேலும், ஜோஷ் கிளார்க்சனும் கடைசி இரண்டு டி20 போட்டிகளுக்கான அணியில் இணைகிறார். தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளதால், முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் உடற்தகுதியைப் பாதுகாப்பதில் நியூசிலாந்து அணி கவனம் செலுத்தி வருகிறது.
தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.