வெல்லிங்டன்,
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் இஷான் கிஷன், நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் டி20 போட்டியின்போது லேசான காயம்ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இரண்டாவது போட்டியிலிருந்து விலகியுள்ளார். தற்போது மருத்துவக் குழு அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
முதல் டி20 போட்டியில் இந்திய அணி 226 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இஷான் கிஷனின் காயம் காரணமாக பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டு, திலக் வர்மா மூன்றாவது இடத்தில் களமிறக்கப்பட்டார். இஷான் பின்னர் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்து 3 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார்.
இஷான் கிஷன் விலகியிருப்பதால், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு இரண்டாவது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், இஷான் முழுமையாகக் குணமடையாவிட்டால் வைபவ் அவருக்குப் பதிலாகக் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும், இறுதி ஆடும் பதினொருவர் அணி குறித்த முடிவு அணி நிர்வாகத்தால் எடுக்கப்படும்.