லாகூர்,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது.
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கிரிக்கெட் தொடரில் லாகூரில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து மோதின. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 46.4 ஓவரில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அதிகபட்சமாக 105 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய பாகிஸ்தான் கேப்டன் ஷாகின்ஷா அப்ரடி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 47.1 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் திரில் வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் வீரர் சதாப் கான் 96 பந்துகளில் 113 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.