துபாய்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா, 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார்.
22 வயதான ஷபாலி வர்மா, செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
இந்த இரண்டு தொடர்களிலும் சேர்த்து 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடிய அவர், 360 ரன்களைக் குவித்தார். மேலும், பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஷபாலி வர்மா இதற்கு முன்பு 2025 நவம்பர் மாதத்திற்கான ஐசிசி சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றிருந்தார். தற்போது மீண்டும் இந்த விருதை பெற்றிருக்கிறார்.