கிரிக்கெட்

ஷபாலி வர்மா அரைசதம்.. வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா

பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின.

மான்செஸ்டர்,

பெண்களுக்கான 10-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் மான்செஸ்டரில் இன்று நடைபெற்ற 23-வது லீக் ஆட்டத்தில் (குரூப் 1) இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. ஜுவைரியா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. மந்தனா 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஷபாலி வர்மா அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார். இறுதியில் இந்திய அணி 16.5 ஓவர்களில் 137 ரன்கள் இலக்கை கடந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.