கிரிக்கெட்

ஷம்மி சில்வா ராஜினாமா: இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் வாரியம்

இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூண் டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு செயற் குழு கூட்டம் கொழும்பில் நேற்று நடந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அவரது நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜி னாமா செய்தனர்.

இலங்கை அதிபர் அனுரா குமரா திசநாயகே உத்தரவை தொடர்ந்து ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூண் டோடு தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணியின் மோசமான செயல்பாடு மற் றும் கிரிக்கெட் வாரிய தலைமை மீதான புகார் கள் காரணமாக ஷம்மி சில்வாவை அழைத்து பதவியை விட்டு விலகும்படி ஏற்கனவே இலங்கை அதிபர் குமார திசநாயக்க அறிவுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து பதவி காலம் இன்னும் 11 மாதங்கள் இருக்கும் நிலை யில் ஷம்மி சில்வா ஒதுங்கியுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை விளையாட்டு சட்டத்தின்படி கிரிக்கெட் வாரியத்தின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளும் தற்காலிகமாக அந்த நாட்டு இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட் டுள்ளது. இதனை விளையாட்டு துறை மந்திரி சுனில் குமரா கமகே தெரி வித்துள்ளார். அத்துடன் நிர்வாகிகளின் ராஜினாமா ஏற்றுகொள்ளப்பட்ட தாகவும், விரைவில் இடைக்கால கமிட்டி நியமிக்கப்படும் என்றும் கூறியுள் ளார்.

SCROLL FOR NEXT