சென்னை,
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான தசுன் ஷனகா பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் (பி.எஸ்.எல்.) விளையாட முதலில் ஒப்பந்தமாகி இருந்தார். அதற்குள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்சிடம் இருந்து அழைப்பு வரவே, பி.எஸ்.எல். வாய்ப்பை புறந்தள்ளி விட்டு ஐ.பி.எல்.-ல் இணைந்து விட்டார்.
இதனால் கோபம் டைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஷனகாவுக்கு, பி.எஸ்.எல். போட் டியில் விளையாட ஓராண்டு தடை விதித்து இருக்கிறது. இதே காரணத் துக்காக ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் முஜரபானிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.