கோப்புப்படம் 
கிரிக்கெட்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வார்னர், ஆன்ரிச் நோர்ஜே தயார்- ஷேன் வாட்சன்

லக்னோ அணியுடனான போட்டியில் பங்கேற்பதற்கு வார்னர்,நோர்ஜே தயாராக இருப்பதாக வாட்சன் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது.

பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது லக்னோ அணியுடனான அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கு வார்னர் தயாராக இருப்பதாக அந்த அணியின்துணை பயிற்சியாளர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷேன் வாட்சன் கூறுகையில், " டேவிட் வார்னர் பயோ பபிளில் இருந்து பயிற்சிக்கு திரும்பிவிட்டார். அடுத்த போட்டியில் விளையாட அவர் தயாராக இருக்கிறார். அதே போல் உடல்தகுதி தேர்வை முடித்துவிட்டு ஆன்ரிச் நோர்ஜேவும் அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கு தயாராக இருக்கிறார் " என அவர் தெரிவித்தார்.