புதுடெல்லி,
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்று வருகிறது .
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 3-வது சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், செக் குடியரசின் டாலிபர் விர்சினா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தி மெத்வதேவ் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற போட்டிகளில் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், டாமி பால், ரபேல் ஜோடார், கேஸ்பர் ரூட் உள்ளிட்டோர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.