கிரிக்கெட்

ஆரம்பமே அதிர்ச்சி...இந்திய அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல் ?

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

மும்பை,

10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி பயிற்சி ஆட்டங்கள் நடந்தன.

நேற்று முன்தினம் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியின் போது இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா காலில் காயமடைந்தார். இதனால் அவர் போட்டியில் பாதியிலே வெளியேறினார்.

இந்த நிலையில் ஹர்ஷித் ராணாவுக்கு காயம் தீவிரமாக இருப்பதால் அவர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.அவருக்கு பதிலாக முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT