கிரிக்கெட்

இந்திய அணி கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமனம்: குத்தாட்டம் போட்டு கொண்டாடிய தந்தை

ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை,

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், அயர்லாந்துக்கு எதிராக 2 போட்டிகளிலும், இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்த போட்டிகளில், சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அணியில் ஷ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டு உள்ளார்.ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் இந்திய அணி கேப்டனாக நியமிக்கப்பட்டதை அவரது தந்தை சந்தோஷ் அய்யர் குத்தாட்டம் போட்டு கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.