கிரிக்கெட்

தோனியின் 14 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்... உலக சாதனையையும் சமன் செய்து அசத்தல்

88 ஆண்டு கால உலக சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

சென்னை,

ஜிம்பாப்வேக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக அவர் தொடர்ந்து 8-வது போட்டியிலும் டாஸ் வென்று அபூர்வ சாதனையை படைத்துள்ளார்.

தோனி சாதனை முறியடிப்பு

கடந்த ஜூன் மாதம் அயர்லாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக அறிமுகமான ஸ்ரேயாஸ் ஐயர், அதன்பிறகு இங்கிலாந்து மற்றும் தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி வரை கேப்டனாக செயல்பட்ட 8 டி20 போட்டிகளிலும் டாஸில் வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் இந்திய டி20 அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி, மே 2010 முதல் பிப்ரவரி 2012 வரை தொடர்ந்து 7 போட்டிகளில் டாஸ் வென்றிருந்த 14 ஆண்டு கால சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்துள்ளார்.

உலக சாதனை சமன்

அதுமட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக அறிமுகமான முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து டாஸ் வென்ற இங்கிலாந்தின் வாலி ஹேமண்டின் 88 ஆண்டு கால உலக சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

SCROLL FOR NEXT