கிரிக்கெட்

ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி சதம்... வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா

இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்து அபார வெற்றி பெற்றது.

லக்னோ,

20 ஓவர் கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த அந்த அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று நடந்தது.

பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா

இந்த ஆட்டத்திற்கான டாஸை வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் ஷாய் ஹோப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். அவர் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய ஷெர்பேன் ரூதர்போர்டு அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் விளாசினார். அவருடன் அகீல் ஹொசைன் 15 ரன்களும், ஷமர் ஸ்பிரிங்கர் 9 ரன்களும் எடுத்தனர்.

171 ரன்களுக்கு ஆல்-அவுட்

இந்திய பந்துவீச்சாளர்கள் இறுதிக்கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதால் வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் நமன்தீர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, முதல் டி20 போட்டியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஐயர் அதிரடி சதம்

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 11 ரன்னிலும், அபிஷேக் சர்மா 21 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து இஷான் கிஷனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி காட்டினார். அவர் வெறும் 42 பந்துகளில் 6 சிக்சர், 10 பவுண்டரியுடன் சதமடித்து அசத்தினார். ஐயரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே இலக்கை கடந்தது.

இந்திய அணி வெற்றி

இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்திருந்தார். இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT