கிரிக்கெட்

புதிய மைல்கல்லை நோக்கி... முதல் முறையாக சொந்த மண்ணில் களமிறங்கும் சுப்மன் கில்

மற்றொரு பெரிய இன்னிங்ஸை பதிவு செய்வாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை,

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய கேப்டன் சுப்மன் கில், தனது சொந்த மாநிலமான பஞ்சாப்பில் உள்ள நியூ சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசிய கில், சொந்த மண்ணிலும் தனது அதிரடியைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இரட்டை சதம் விளாசி வரலாறு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் இலக்கை இந்திய அணி துரத்தியபோது, கில் நிதானமாக விளையாடி 110 ரன்கள் எடுத்தார்.

அதனைத் தொடர்ந்து கவுகாத்தியில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 406 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கை வெற்றிகரமாக விரட்டிப் பிடித்தது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய சுப்மன் கில், 133 பந்துகளில் 26 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களுடன் 223 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் மிக அதிவேக இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

4,000 ரன்களை நெருங்கும் கில்

இந்நிலையில், இந்திய மண்ணில் அனைத்து வடிவிலான சர்வதேச போட்டிகளிலும் சேர்த்து 4,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டும் வாய்ப்பும் கில்லுக்கு உள்ளது.

இந்தியாவில் இதுவரை 65 போட்டிகளில் 79 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள கில், 3,957 ரன்கள் குவித்துள்ளார். இதில் 15 சதங்கள் மற்றும் 17 அரைசதங்கள் அடங்கும். இதனால் 4,000 ரன்களை எட்ட அவருக்கு இன்னும் 43 ரன்கள் மட்டுமே தேவை.

சொந்த மாநிலமான பஞ்சாப்பில் உள்ள முல்லன்பூர் மைதானத்தில் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் களமிறங்கும் கில், தனது சிறப்பான பார்மைத் தொடர்ந்து மற்றொரு பெரிய இன்னிங்ஸை பதிவு செய்வாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT