மும்பை,
குறைந்த இன்னிங்ஸ்களில் 10 ஒருநாள் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஷிகர் தவானின் சாதனையை கில் முறியடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான நேற்றைய ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 108 பந்துகளை எதிர்கொண்ட அவர், 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 110 ரன்கள் குவித்தார். மறுபுறம் கோலியும் சதம் விளாசினார். இருவரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி எளிதில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் குறைந்த இன்னிங்ஸ்களில் 10 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை கில் தன்வசப்படுத்தியுள்ளார்.
இதற்கு முன்பு ஷிகர் தவான் 77 இன்னிங்ஸ்களில் 10 ஒருநாள் சதங்களை அடித்திருந்தார். தற்போது சுப்மன் கில் வெறும் 67 இன்னிங்ஸ்களில் 10 சதங்களை எட்டி, தவானின் சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 10 சதங்களை எட்டிய இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.